Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின் எடுத்த காட்சிகள் வேண்டாம்… துப்பறிவாளன் 2 ஷூட்டிங்கில் விஷால் செய்யும் அதிரடி மாற்றம்!

vinoth
புதன், 14 பிப்ரவரி 2024 (07:26 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. பின்னர் துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை.

இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் இதுவரை மிஷ்கின் எடுத்து வைத்திருந்த காட்சிகளை பயன்படுத்தாமல் மீண்டும் அனைத்துக் காட்சிகளையும் ஷூட் செய்யும் முடிவில் உள்ளாராம் தயாரிப்பாளரும் இயக்குனருமான விஷால்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments