Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’விஷால் 31’ படப்பிடிப்பு முடிவது எப்போது? விஷால் டுவிட்

’விஷால் 31’ படப்பிடிப்பு முடிவது எப்போது? விஷால் டுவிட்
, புதன், 16 ஜூன் 2021 (08:37 IST)
விஷால் நடிப்பில் உருவாகும் விஷாலின் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியானது என்பதும் போஸ்டர் மற்றும் வீடியோவும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவில் முடிந்துவிடும் என்று விஷால் சற்று முன்னர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ஜூலை இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும், படப்பிடிப்பு தளத்தில் அனைத்தும் விதிமுறைகளும் கடைபிடிக்க படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
து.பா சரவணன் என்பவர் இயக்கும் இந்தப் படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2’ மற்றும் எனிமி ஆகிய படங்கள் முடிந்துவிட்டது என்பது தெரிந்தது
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சர் நிவாரண நிதியாக தயாரிப்பாளர் தாணு கொடுத்த தொகை!