Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய விஷால்

Advertiesment
பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய விஷால்
, திங்கள், 31 அக்டோபர் 2022 (18:12 IST)
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசிக்குச் சென்ற நடிகர் விஷால், அங்குள்ள  நவீன வசதிகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து, பிரதமர் மோடியைப் பாராட்டி டுவீட் பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதிய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள வாரணாசியில் அமைந்துள்ள காசி கோயில் உலகப் பிரசித்தி பெற்று இந்துகளின் புனிததளமாகக் கருதப்படுகிறது. எனவேம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் மக்கள் கங்கை நதியில்  புனித நீராடி விட்டு காசி விஸ் நாதரை தரிசித்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்களவை தொகுதியாக வாரணாசியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி அடிக்கல் நாட்டிய  ரூ.339 மதிப்பிலான புதிய வளாகம், திறக்கப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகள் வசதி மையம், உணவகம்,  உள்ளிட்ட பல வசதிகள்  செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பயனடைந்து வருகின்றன.

எனவே,  தர்ஷன் பூஜாவை முன்னிட்டு, நடிகர் விஷால் காசிக்குச் சென்றிருந்த நிலையில்,  இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில்.’’அங்குள்ள கங்கையில் புனித நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்ததாகவும், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் , புதிய கட்டமைப்புகள்,  மறுசீரமைப்புகள் எல்லாம் அற்புதமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் அங்கு செல்லும் வசதி உள்ளது.  இந்த வசதியை செய்த உங்களுக்கு நன்றி! கடவுள் உங்களுக்கு ஆசி புரிவாராக ‘’என்று தன் டுவிட்ட பக்கத்தில் தெரிவித்துள்ளார்.,

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''துணிவு''பட ப்ரீ ரிலீஸில் கலந்து கொள்வாரா அஜித்?