விஷாலின் ரத்னம் படத்தின் ஆக்ரோஷ பாடல் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (16:08 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி தற்போது விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்த படத்தை குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் அடுத்தடுத்து நடந்து வந்தது. படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ’ரத்னம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாராய் ரத்னம் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த பாடலை விவேகா எழுத, செண்பகராஜ் பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 8 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments