Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹத் பாசில் & வடிவேலு இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (15:58 IST)
மாமன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது. படத்தில் நடித்த வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகிய இருவரின் நடிப்பும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு இப்போது ஃபஹத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98 ஆவது படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்க உள்ளார். இவர் திலீப் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான வில்லாலி வீரன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். புத்தாண்டை முன்னிட்டு இன்று இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments