விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை… வீட்டில்தான் ஓய்வில் இருக்கிறார்.. மேலாளர் பதில்!

vinoth
புதன், 8 ஜனவரி 2025 (11:33 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால்.  தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்த அவர் சமீபமாக ‘மார்க் ஆண்டனி’ தவிர மற்ற எந்த வெற்றியையும் கொடுக்கவில்லை. இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலெட்சுமி உள்ளிட்டோர் நடித்த ‘மதகஜராஜா’ படம் கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு வந்த விஷால் கண்ணாடி அணிந்து, கை நடுநடுங்க பேசியது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது முதலாக ’விஷாலுக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என சமூக வலைதளங்கள் முழுவதும் பேச்சாக இருந்தது.

இந்நிலையில் இப்போது விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவ அது குறித்து விஷாலின் மேலாளர் பதிலளித்துள்ளார். அதில் “விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை. அவர் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவருக்குக் காய்ச்சல் வந்ததால் சோர்வாகக் காணப்படுகிறார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யீன் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் அசத்தல் க்ளிக்ஸ்!

வெண்ணிற உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் அசத்தல் க்ளிக்ஸ்!

பிரபல ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி… இசை நிகழ்ச்சி ரத்து!

‘தேரே இஷ்க் மெய்ன்’ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

தனுஷ் கதையை நிராகரித்தாரா ரஜினிகாந்த்?... திடீரெனப் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments