நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.
விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்நிலையில் இப்போது தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷூட்டிங் நடத்த முடியாது என்பதால் ஊரடங்கு இல்லாத ஏதாவது ஒரு மாநிலத்துக்கு சென்று படப்பிடிப்பை நடததலாமா என விஷால் யோசித்து வந்தனர். அதையடுத்து ஐதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.