Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பறிவாளன் 2 ட்ராப்பா? அடுத்த வேலைகளைப் பார்க்க கிளம்பிய விஷால்!

துப்பறிவாளன் 2 ட்ராப்பா? அடுத்த வேலைகளைப் பார்க்க கிளம்பிய விஷால்!
, புதன், 5 மே 2021 (10:33 IST)
நடிகர் விஷால் நடிப்பில் உருவான துப்பறிவாளன் 2 படம் கைவிடப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது லண்டனில் மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம் என விஷால் தரப்பு தயாரானது. ஆனால் படத்தில் விஷால் படமாக்கியக் காட்சிகளுக்கும், மிஷ்கினின் காட்சிகளுக்கும் துளிகூட ஓட்டவில்லை என்பதால் படக்குழு அதிர்ச்சியானது. இந்நிலையில் இப்போது போனவரை போகட்டும் என்று அந்த படத்தைக் கைவிட்டுவிட்டு விஷால் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் வசந்தபாலனுக்குக் கொரோனா!