Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தியேட்டர்களில் ஈயாடிய லத்தி… தொலைக்காட்சியில் படைத்த சாதனை- பொங்கல் வின்னர் விஷால்!

தியேட்டர்களில் ஈயாடிய லத்தி… தொலைக்காட்சியில் படைத்த சாதனை- பொங்கல் வின்னர் விஷால்!
, சனி, 28 ஜனவரி 2023 (09:01 IST)
விஷால் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் லத்தி. மோசமான விமர்சனங்களையும் மோசமான வசூலையும் அந்த படம் பெற்றது.

விஷாலின் சமீபத்தைய படமாக லத்தி படம் சமீபத்தில் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. ஆனால் படத்தின் சேட்டிலைட் உரிமை மற்றும் இந்தி டப்பிங் உரிமை ஆகிய தொகைகளின் மூலம் பெரிய அளவிலான நஷ்டம் இல்லாமல் காப்பாற்றியது.

இப்படி திரையரங்குகளில் சொதப்பிய லத்தி திரைப்படம் தொலைக்காட்சியில் கலக்கியுள்ளது. சமீபத்தில் முடிந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ் தொலைக்காட்சிகளில் லத்தி, விருமன், திருச்சிற்றம்பலம் மற்றும் லவ் டுடே ஆகிய படங்கள் ஒளிபரப்பப் பட்டன. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விஷாலின் லத்தி திரைப்படம் டி ஆர் பியில் முதலிடத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இத்தனைக்கும் லத்தியோடு ஒளிபரப்பான மற்ற அனைத்துப் படங்களுமே சென்ற ஆண்டின் சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லி இயகத்தில் அஜித்தா?... யார் பார்த்த வேல இது?