Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (22:45 IST)
விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விஷால் இந்த அறிவிப்பு புரிதல் இல்லாமல் வெளியானது என்றும், தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்துதல் குழுவின் முடிவுக்கு பின்னரே 'இரும்புத்திரை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்துதல் குழு 'இரும்புத்திரை' படத்தை மே 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் 11ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.
 
விஷால், சமந்தா, ஆக்சன்கிங் அர்ஜூன், மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம்பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments