Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போட்டியின்றி வெளியாகும் விஷாலின் ‘சக்ரா’: வசூலை குவிக்குமா?

போட்டியின்றி வெளியாகும் விஷாலின் ‘சக்ரா’: வசூலை குவிக்குமா?
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:09 IST)
விஷால் நடித்த ‘சக்ரா’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட அனைத்து தடங்கல்களும் நீக்கப்பட்ட நிலையில் இன்று திட்டமிட்டபடி வெளியாகும் என விஷால் நேற்றைய தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ‘சக்ரா’திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் டிரைலர் ஆகியவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட எந்தவித போட்டியும் இன்றி இன்று வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது 
 
மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 திரைப்படம் வெளியானாலும் தமிழில் வெளியாகும் இரண்டு படங்களில் ‘சக்ரா’ஒன்று என்பதும் இன்னொன்று ஆனந்தி நடித்த காவிரி from நடுக்காவேரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகவுள்ள இந்த மூன்று படங்களில் பெரும்பாலான பார்வையாளர்கள் ‘சக்ரா’ படத்திற்குதான் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றும் இதனால் இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்றும் வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
மாஸ்டர் படத்திற்குப் பின்னர் இந்த ஆண்டு அதிக வசூலைக் குவிக்கும் படமாக ‘சக்ரா’ இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த்ரிஷ்யம் 2 படத்தின் டுவிட்டர் விமர்சனங்கள்!