Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷாலுக்கு இப்படி ஒரு ரசிகரா?

விஷாலுக்கு இப்படி ஒரு ரசிகரா?
, திங்கள், 8 மே 2017 (16:19 IST)
விஷால் ரசிகர் ஒருவர், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.


 

 
சுரேஷ் காமாட்சி நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிரணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். நீதிமன்றம் நடிகர் சங்க கட்டிடத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இதுகுறித்து விமர்சித்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று இரவு விஷால் ரசிகர்கள் என கூறி சிலர் அவருக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். ஒரு நபர் விஷால் பெயரை சொல்லி சுரேஷ் காமாட்சியை கடுமையாக ரவுடி போல் மிரட்டியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
 
இதனால் விஷால் மற்றும் அவரது ரசிகர் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். மேலும் விஷாலை எதிர்த்து நடிகர் சங்க உறுப்பினர் ஒருவர் பேசியபோது, அவர் இதேபோல் மிரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர்ஸ்டார் படம் 3 நாள் ; பாகுபலி 10 நாள் : கஸ்தூரி ராஜா பேச்சு