இப்போதைய நிலவரப்படி, டிசம்பரில் விஷால் தனிக்கட்சி தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறார்கள்.
ரஜினியும், விஜய்யும் அரசியலுக்கு வந்து, படத்தில் உதவி செய்தது போல நமக்கும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் பாமர மக்கள். ஆனால், அவர்கள் அரசியலுக்குள் வருவதற்குள், தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்துவிடும் போலிருக்கிறது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத கமலும், விஷாலும் களத்தில் குதித்திருப்பதுதான் ஆச்சரிய அதிர்ச்சி. ட்விட்டர் தொடங்கி, பிக் பாஸ், கல்யாண வீடு என எல்லாவற்றிலும் அரசியல் பேசும் கமல், விரைவில் தனிக்கட்சி தொடங்கலாம் என்கிறார்கள்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றிக்கொடி நாட்டிய விஷாலும், அரசியல் களத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க விரும்புகிறாராம். அதனால், வருகிற டிசம்பரில் மாபெரும் அரசியல் மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார் என்கிறார்கள். அந்த மாநாட்டில் தன்னுடைய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தலாம் என்ற கூடுதல் தகவலையும் அவர்கள் கூறுகின்றனர்.