Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷாலுக்கு ஏன் எதுவுமே புரிய மாட்டேங்குது: திரையரங்கு உரிமையாளர்கள் புலம்பல்

, செவ்வாய், 23 மே 2017 (22:10 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற விஷால், தயாரிப்பாளர்கள் பிரச்சனைகளையும் தாண்டி ஒட்டுமொத்த திரையுலகிற்கும் சேர்த்து யோசிப்பதால் ஒருசில பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.



 


குறிப்பாக வரும் 30ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் என்பதை அறிவித்தார். ஆனால் அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து சங்கங்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஆகியோர்களிடம் கலந்து ஆலோசித்து அறிவிப்பு செய்திருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்கது. ஆனால் தன்னிச்சையாக அவர் அறிவித்ததால் பலர் இந்த வேலை நிறுத்ததிற்கு ஆதரவு கொடுக்கவில்லை. எனவே வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல் தற்போது ஆன்லைன் புக்கிங் குறித்து இணையதளம் தொடங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை அவர் திரையரங்கு உரிமையாளர்களிடம் கலந்து ஆலோசித்து அறிவித்திருக்கலாம். தற்போது இந்த திட்டத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருவள்ளூர் - காஞ்சிபுரம் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் கண்ணப்பன் கூறியதாவது: ஆன்லைன் புக்கிங்கிறது தியேட்டர் சம்பந்தப்பட்டது. எல்லாருமே ஆன்லைனில் புக் பண்ண மாட்டாங்க. ஆன்லைன் புக்கிங் கட்டணம்கிறது நம்ம வசதிக்காகச் செலுத்தும் கட்டணம். சாதாரண மக்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் பண்றதில்லையே. விஷால் தம்பிக்கு அது தெரியலை.

தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன வேலை இருக்கோ, அதை மட்டும் அவர் செய்துட்டுப் போலாம். ஆன்லைன் புக்கிங் எங்க உரிமை. எங்க தியேட்டருக்கு நாங்க டிக்கெட் விற்கிறோம். இதுல ஏதும் பிரச்னைன்னா நாங்கதான் சொல்லணும். தியேட்டர் பற்றி ஏதும் பேசுறதா இருந்தா, விஷால் முதல்ல எங்ககிட்டதானே பேசியிருக்கணும்? ஏன்னா, ஒவ்வொரு தியேட்டர்காரரும் ஒவ்வோர் இணையதளத்துல ஒப்பந்தம் போட்டிருப்பாங்க. திடீர்னு இவர், `நான் பண்றேன்'னு எப்படி வர முடியும்? விஷாலுக்கு இது எதுவுமே புரியாம, எதையாவது சொல்லிட்டு முழிக்கிறார்' என்று கூறினார்.

@@@@@@@@@@@@@@@@@@


ரூ.12-க்கு விமானத்தில் பறக்க வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

விமான பயணம் என்றாலே ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கும் எட்டாக்கனி என்ற காலம் போய் குறைந்த விலையில் அனைத்து தரப்பினர்களூம் விமான பயணம் மேற்கொள்ளலாம் என்ற நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம் ஏழை எளிய மக்களும் விமான பயணம் செல்லும் வகையில் ரூ.12க்கு விமான பயணம் செய்யும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்த ஆண்டு 12வது ஆண்டை நிறைவு செய்வதை அடுத்து இந்த ரூ.12 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் மே 23 முதல் 28 ஆம் தேதி வரை இதற்கான முன்பதிவு தொடங்கவிருப்பதாகவும் 'ஸ்பைஸ் ஜெட்' நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே விமான பயணம் இதுவரை செய்யாதவர்கள் இந்த அரிய வாய்ப்பை இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் மரணம்....