விஷால்-மிஷ்கின் மீண்டும் இணைவது உண்மையா?

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (20:33 IST)
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்த ’துப்பறிவாளன்’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. லண்டனில் முதல் கட்ட படப்பிடிப்பு மற்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மிஷ்கின் மற்றும் நாயகன், தயாரிப்பாளர் விஷால் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து ’துப்பரிவாளன் 2’ படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். அதன் பின்னர் விஷால் அந்த படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் விஷாலும் மிஷ்கினும் இணைய இருப்பதாகவும் ’துப்பறிவாளன் 2’ படத்தை மிஷ்கினே தொடர இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் விஷாலுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது மிஷ்கினுடன் விஷால் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்றும் ’துப்பறிவாளன் 2’ படத்தின் பட்ஜெட்டை மிகப்பெரிய அளவில் மிஷ்கின் விரயம் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தை விஷால் தான் இயக்கி முடிக்கப்போவது உறுதி என்பது தற்போது தெரியவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments