விஷால் - தன்ஷிகா காதலுக்கு டி ராஜேந்தர் திட்டியது தான் காரணமா? பரபரப்பு தகவல்..!

Mahendran
புதன், 21 மே 2025 (13:57 IST)
விஷாலை தனக்கு 15 வருடமாக தெரியும் என்று சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் தன்ஷிகா கூறினாலும், இருவருக்கும் இடையிலான நெருக்கமான நட்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் தான் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
தன்ஷிகா நடித்த விழித்திரு என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழா 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டி. ராஜேந்தர் கலந்து கொண்டிருந்தார். தன்ஷிகா பேசிய போது, டி. ராஜேந்தர் பெயரை அவர் சொல்ல மறந்ததை காரணமாகக் கொண்டு, டி. ராஜேந்தர் ஆத்திரமாகி, தன்ஷிகாவை மேடையிலேயே திட்டினார்.
 
இதனால், கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்ட தன்ஷிகா, கண்ணீருடன் மன்னிப்பு கேட்டார். ஆனாலும், அவரது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாமல் டி. ராஜேந்தர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததை அடுத்து, தன்ஷிகா அந்த விழாவில் இருந்து வெளியேறினார்.
 
அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஷால், தன்ஷிகாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். அது மட்டும் இன்றி, தன்ஷிகாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
 
அப்போது முதல்தான் விஷால் மற்றும் தன்ஷிகா இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டதாகவும், அந்த நட்பு தற்போது காதலாகி, திருமணத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments