Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் அலுவலக கணக்காளர் மீதான மோசடி புகார் – முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:18 IST)
நடிகர் விஷால் தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண் பல லட்சரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஷால் நடிகராக மட்டும் இல்லாமல் விஷால் பில்ம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அவர் நடித்த ஆம்பள, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் 45 லட்சம் ரூபாயை களவாடியுள்ளதாக விஷாலின் மேனேஜர் அரி வடபழனி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தார். மேலும் அந்த பணத்தை வைத்து அவர் வீடு ஒன்று வாங்கியுள்ளதாகவும் மேலும் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக தற்போது விருகம்பாக்க காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த குற்றச்சாட்டை அந்த பெண் மறுத்தார்.

மேலும் நீதிமன்றத்தில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த பெண் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த சிரிப்பு வெடி from சந்தானம்… டிடி நெக்ஸ்ட் லெவஸ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறாரா தனுஷ்… லக்கி பாஸ்கர் இயக்குனரின் அடுத்த பட அப்டேட்!

ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமாருக்குப் பதில் இணையும் பிரபலம்!

நடிகர் விநாயகன் குடிபோதையில் அலப்பறை… சிக்கினார் அடுத்த சர்ச்சையில்!

ஜேசன் சஞ்சய் முதல் படம்.. கிளாப் அடித்து துவக்கி வைக்கும் தளபதி விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments