Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹரி விஷால் இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஹரி விஷால் இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:11 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஹரி.

இதையடுத்து கடந்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கியது. இந்நிலையில் இப்போது படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக விஷால் அறிவித்துள்ளார்.  மேலும் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறனை அடிக்கடி சந்திக்கும் விஜய் மேனேஜர்…புதுப்படத்துக்கு வாய்ப்பா?