Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடித்துவிட்டு மேடையில் மயங்கினேனா?... நடிகர் விஷால் விளக்கம்!

vinoth
செவ்வாய், 13 மே 2025 (15:39 IST)
சமீபகாலமாக நடிகர் விஷாலின் உடல்நிலைக் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.  அவர் நடிப்பில் உருவான ‘மத கஜ ராஜா’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது விஷால் சரியாகப் பேசமுடியாமல் கைகள் நடுங்கப் பேசினார். ஆளும் மிகவும் இளைத்து ஒல்லியாகக் காணப்பட்டார். இதனால் அவர் உடல்நிலைக் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் பரவின. ஆனால் அவருக்கு வெறும் வைரஸ் காய்ச்சல்தான் என்று அவரது தரப்பில் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் உள்ள கூவாகம் திருவிழாவில் நடந்த மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டார். அப்போது மேடையிலேயே அவர் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக அவர் மயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஷால் குடிபோதையில் இருந்ததால்தான் மயங்கி விழுந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள விஷால் “நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி 2 ஆண்டுகள் ஆகின்றன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சித்தார்த்& சரத்குமார் நடிக்கும் ‘3BHK’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகளவில் 200 கோடி… கேரளாவில் மட்டும் 100 கோடி… மோகன்லாலின் ‘துடரும்’ படைத்த சாதனை!

சார்பட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது?... ஆர்யா பகிர்ந்த தகவல்!

பிரபுதேவா & ரஹ்மான் இணையும் ‘Moon walk’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபலம்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் படத்தில் ராஷ்மிகா மந்தனா.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments