Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் விவாகரத்து? இரண்டாவது மனைவிக்கும் அல்வா கொடுத்த விஷ்ணு விஷால்!

மீண்டும் விவாகரத்து? இரண்டாவது மனைவிக்கும் அல்வா கொடுத்த விஷ்ணு விஷால்!
, வியாழன், 23 மார்ச் 2023 (13:06 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
 
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்துக்கொண்டனர்.
 
காதலித்து கல்யாணம் செய்த மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால் போதைக்கு அடிமையானார். பின்னர் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் படவாய்ப்புகளையும் இழந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வந்து புதிய படங்களில் நடித்து ராட்சசன் போன்ற வெற்றிகளை கொடுத்தார். 
 
பின்னர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது ட்விட்டரில்  “பரவாயில்லை, மீண்டும் முயற்சித்தேன். நான் மீண்டும் தோல்வியடைந்தேன். மீண்டும் கற்றுக்கொண்டேன். கடைசி முறை தோற்றது என்னுடைய தவறு எதுவும் இல்லை... அது துரோகம் மற்றும் ஏமாற்றம்” என பதிவிட்டு வாழ்க்கை பாடம் என கேப்ஷனும் கொடுத்துள்ளார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அவர் இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டீர்களா? என ஷாக் ஆகிவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் அஞ்சலி.