மனைவிக்கு ரொமான்டிக் முத்தம் கொடுத்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் பாலிவுட் அனுஷ்கா சர்மா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் என்பதும் அவருக்கு ஜனவரி மாதத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.
இதையடுத்து கடந்த ஜனவரி 11ம் தேதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு வாமிகா (Vamika) என பெயரிட்டு மகிழ்ந்தனர். இந்நிலையில் தற்போது விராட் கோலி முட்டிப்போட்டு மனைவிக்கு முத்தம் கொடுத்து காதலை வெளிப்படுத்திய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதில் அனுஷ்காவின் ஹேப்பி முகம் பார்ப்பதற்கு மனநிறைவை தந்துள்ளது.