Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல பாடகர் கொலை… வன்முறை வெடித்ததில் 239 பேர் பலி…

Advertiesment
Hachalu Hundessa
, வியாழன், 9 ஜூலை 2020 (21:51 IST)
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில்  ஒன்று எத்தியோப்பியா. இந்த நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் ஹஹலூ ஹண்டிசா என்பவர் கடந்த 29 ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் அங்குள்ள ஒரோமியா என்ற இனக்குழுவைச் சேர்ந்த பாடகரின்  கொலைச் சம்பவத்தால்  அவரது இனத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தின் குதித்துள்ளனர்.

இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. இந்தப் போராட்டக் குழுவினரைக் கலைக்க போலீஸார் தடியடி மேற்கொண்டர். அதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கடைகளை தீ வைத்துக் கொளுத்தினர்.

இந்நிலையில் உக்கிரம் அடைந்துள்ள இந்தப்போராட்டத்தால் இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் பட தயாரிப்பாளர் படத்தில் விஜய் மகன் நடிக்கிறாரா ?