Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லண்டன் ஸ்டேஜில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடிய பிகில் நடிகை!

லண்டன் ஸ்டேஜில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடிய பிகில் நடிகை!
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (17:02 IST)
லோகேஷ் கானகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள படம் 'மாஸ்டர்'. இந்த படத்தில் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடல் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்துவிட்டது.

தற்போது வரை 67 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடல் அனைவரது பேவரைட் பிலே லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட அனைத்திலும் ரெக்க கட்டி பறக்கும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு பல்வேறு திரைப்பட பிரபலங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வந்ததனர்.

இந்நிலையில் தற்போது விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து அணியில் ஒருவராக நடித்த வினயா சேஷன் இங்கிலாந்தில் நடைபெற்ற நடனப் போட்டி ஒன்றில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆத்தி துப்பாக்கி நடிகையா இது..? தூக்கலான கார்ச்சியில் தூள் கிளப்புறீங்க!