Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு நெஞ்சு வலியா?... நடிகர் விமல் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (15:04 IST)
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது. இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு இப்போது அதிகளவில் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விமலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.  அதனை மறுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “ எனக்கு நெஞ்சுவலி என்று தகவல்கள் பரவுவதை நானும் கேட்டேன். நான் நலமாக இருக்கிறேன். இப்போது படப்பிடிப்பில் இருக்கிறேன். இன்னொரு செய்தியும் கேள்விப் பட்டேன். நான் மதுவுக்கு அடிமையாகி வீட்டுக்குள்ளேயே இருப்பதாக வதந்திகள் பரவின. அதெல்லாம் கேட்டா காமெடியா இருக்கு. விஷக்கிருமிகள் இது போல தகவல்களை பரப்புகின்றன. வாழுங்க… மத்தவங்களையும் வாழவிடுங்க” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments