Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் ‘சித்தா’- கமல்ஹாசன் வெளியிட்ட போஸ்டர்!

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் ‘சித்தா’- கமல்ஹாசன் வெளியிட்ட போஸ்டர்!
, செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:10 IST)
பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். அடுத்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சித்தார்த் நடிப்பில் பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ள சித்தா என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அறிமுகப்படுத்தி வீடியோ வெளியிட்டு பாராட்டியுள்ளார் கமல்ஹாசன். மேலும் நேற்று இந்த படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த படம் ஒரு குழந்தைக்கும், அவளின் சித்தப்பாவுக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சிப்பூர்வமான கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் மூன்றாம் பாகத்துக்கு விக்ரம் கதை எழுதுவார்… மணிரத்னம் செம்ம கலாய்!