Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் கூட வரமாட்டேன்… விக்ரம் தடாலடி – துருவ நட்சத்திரம் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (09:39 IST)
நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்துக்காக அவர் இன்னும் நடிக்க வேண்டிய 6 நாட்கள் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று சொல்லியுள்ளாராம் விக்ரம்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் பணப்பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் மேனன். இப்போது விக்ரம் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரம்முடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் பற்றிய முக்கிய அப்டேட்டை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றில் அதை அவர் வெளியிட்டுள்ளார். கௌதம் மேனன் தயாரித்த நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் நரகாசூரன் ஆகிய படங்களும் ரிலிஸாகாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸாகவேண்டுமென்றால் இன்னும் 6 நாட்கள் விக்ரம்மை வைத்து கௌதம் மேனன் ஷூட் செய்ய வேண்டும். ஆனால் கௌதம் மேல் செம கோபத்தில் இருக்கும் விக்ரம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் விக்ரம் இல்லாமலேயே பட்டி டிங்கரிங் பார்த்து துருவ நட்சத்திரத்தை ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம் கௌதம் மேனன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments