கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல், தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் விக்ரம்.
51 வயதாகிவிட்டது. ஆனாலும், இன்னும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம். வெற்றியோ, தோல்வியோ… ஒவ்வொரு படத்துக்கும் 200 சதவீத உழைப்பத் தர அவர் தயங்குவதே இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் மாறுபட்ட நடிப்பைத் தர அவர் தயங்குவதே இல்லை.
ஒரே நேரத்தில் ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ படங்களில் மாறி மாறி நடித்து வந்தார் விக்ரம். அதில், ‘ஸ்கெட்ச்’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில், இதுவரை 3 ஷெட்யூல் முடிந்திருக்கிறது. அடுத்த ஒரு மாதம் முழுக்க ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்தப் படத்தில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். செப்டம்பர் 15ஆம் தேதி ‘சாமி 2’ படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. முதல் ஷெட்யூலை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் ஹரி.