விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றது. அதையடுத்து இப்போது சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை அடுத்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் எனவும் பின்னர் முதல் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி ரிலீஸ் பொங்கலில் இருந்து பின்வாங்கியதால் இந்த படம் அந்த தேதியில் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில்தான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.