Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ 5 நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (13:02 IST)
விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் படம் சம்மந்தமான ஒரு வழக்கால் ரிலீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலீடு செய்திருந்த IVY என்ற நிறுவனத்துக்கு அவர் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.

ஆனால் அந்நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும் அதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடையை அறிவித்தது. அதன் பின்னர் வழக்கு நடந்து மாலைக் காட்சியில் இருந்துதான் படம் ரிலீஸானது.

படம் பற்றி சில விமர்சனங்கள் இருந்தாலும், பெரும்பாலும் ஒரு நேர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆனாலும் படத்தின் வசூல் பெரியளவில் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் படம் இதுவரை சுமார் 27 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் போன்ற ஒரு மாஸ் ஹீரோவின் படத்துக்கு இந்த வசூல் குறைவுதான். சமீபகாலமாக விக்ரம் பெரிதாக எந்த ஹிட்டும் கொடுக்காததே இந்த வசூல் சரிவிற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

பரபர த்ரில்லர் ஸ்டைலில் DNA டிரைலர்… அதர்வாவுக்குத் திருப்புமுனையாக அமையுமா?

வாடிவாசல் கிடப்பில் போடப்பட்டதால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்!

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments