Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்டேஜ் பாடல் தந்த மாஸ் ஃபீலிங்கை இழந்த ரசிகர்கள்… ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸில் நடந்த மாற்றம்!

vinoth
திங்கள், 28 ஏப்ரல் 2025 (11:12 IST)
கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸான வீர தீர சூரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆனால் படம் ரிலீஸின் போது பல சட்ட சிக்கல்களை சந்தித்து முதல் நாள் இரண்டு காட்சிகள் ரிலீஸாகாமல் அதன் பிறகுதான் மாலைக் காட்சியில் இருந்து ரிலீஸானது.

இப்போது வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தும் இந்த படம் மிகக் குறைவான அளவிலேயே வசூலித்துள்ளதாக ரசிகர்களும் விமர்சனங்களும் கருத்து தெரிவித்தனர். அதற்குக் காரணம் விக்ரம்தான் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர். ஏனென்றால் அவரை நம்பி தியேட்டர் வந்த ரசிகர்களைப் பல ஆண்டுகளாக அவர் வைத்து செய்துள்ளார். அதன் காரணமாக ரசிகர்கள் அவர் படத்துக்கு செல்வதையே விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதுதான் வீர தீர சூரன் படத்தின் வசூலில் பிரதிபலித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆனது. படம் திரையரங்கில் வெளியான போது க்ளைமேக்ஸ் காட்சியில் விக்ரம்மின் ‘தூள்’ படத்தில் இடம்பெற்ற ‘மதுர வீரன்’ பாடலை வைத்து மாஸ் ஃபீலை கொடுக்க இயக்குனர் முயன்றிருந்தார். அந்த பாடலுக்கு பாராட்டுகளும், எதிர்மறையானக் கருத்துகளும் கிடைத்தன. இந்நிலையில் ஓடிடியில் அந்தப் பாடலை நீக்கிவிட்டு படத்துக்காக ஜி வி உருவாக்கிய இசைக் கோர்வையைப் பயன்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments