இன்று விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர். கொண்டாட்டத்தை தாண்டி பல சமூக நற்செயலிலும் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் பிறந்த நாள் முன்னிட்டு விஜய் 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் மெர்சலாகி வருகிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதி, மாதவன் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகயுள்ளது. இது விஜய்க்கு பிறந்த நாள் பரிசாக அமையவுள்ளது.
இப்படத்தில் மாதவன் போலீஸாக நடிக்க, விஜய்சேதுபதி கேங்ஸ்டராக நடிக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். புஷ்கர் - காயத்ரி ஆகியோர் படத்தை இயக்கியுள்ளனர்.