தங்கலான் ஷூட்டிங் இன்னும் எத்தனை நாள் மீதமுள்ளது?... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
புதன், 24 மே 2023 (08:01 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தங்கலான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலான் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்ட போது திடீரென விலாப்பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரின் காயம் நல்வாய்ப்பாக பெரிதாக இல்லை என்றும் சில வாரங்கள் ஓய்வுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படக்குழு வெளியிட்டுள்ள தகவலின் படி இன்னும் 20 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாகவும் விரைவில் ஷூட்டிங் தொடங்கி முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments