சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் வீர தீர சூரன். நடிகர் விக்ரம் ஹிட் படத்தை கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவரும் கடுமையான உழைப்பை போட்டு பல படங்களிலும் நடித்து பார்த்தார். ஆனால், அப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும், நம்பிக்கையை விடாமல் நடித்து வருகிறார்.
விக்ரமின் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ளது. சிபு தமீன் தயாரித்துள்ள இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கியுள்ளார். மதுரை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படம் 2 பாகங்களாக உருவாகவுள்ளது. இதில், இப்போது வெளியாவது இரண்டாம் பாகம் என்கிறார்கள். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா ,துஷரா விஜயன், மலையாள நடிகர் சுராஜ் வேஞ்சரமூடு, சித்திக்யூ உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் மற்றும் துஷரா விஜயன் ஆகியோரு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியும் கொடுத்தனர்.
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலும் ஆனது. இந்த படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விக்ரம், சுராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ரசிகர்களிடம் பல தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்த மேடையில் பேசிய சியான் விக்ரம் வீர தீர சூரன் கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறும். எஸ்.ஜே.சூர்யா மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் சித்தா, சேதுபதி இந்த இரண்டு படங்களின் கலவையாக இருக்கும் என கூறியிருக்கிறார்.