Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயசானாலும் விக்ரம் கர்ஜிக்கிறார்...பொ.செ-1 பார்த்த ரங்கராஜ் பாண்டே டுவீட்

Advertiesment
Ponniyin selvan review
, புதன், 5 அக்டோபர் 2022 (16:06 IST)
''#PS1 - குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்ததாக'' பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மணிரத்னம். பல வெற்றிப் படங்களை இயக்கியவர், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கியிருந்தார்.

செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி  நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்து வருகிறது. இப்படத்தை சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிரபல ஊடகவியலாளரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகராக அறிமுகம் ஆனவருமான ரங்கராஜ் பாண்டே தன் டுவிட்டர் பக்கத்தில் பொ.செ-1 படத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

அதில், #PS1 - குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்தேன். அமர்க்களம்.  கார்த்திக்கு வாழ்நாள் வாய்ப்பு. மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஜெயம் ரவிக்கு அடுத்த பாகத்தில் முக்கியத்துவம் கிடைக்கலாம். வயசானாலும் விக்ரம் கர்ஜிக்கிறார் இளையராஜா இல்லையே என ஏங்கினாலும், periodical theme இல்லையோ என சந்தேகிக்க வைத்தாலும் நிறைய இடங்களில் ரஹ்மான் நின்று விளையாடுகிறார். ஜெயமோகன் வசனம், காதல் காட்சிகளில் தேன். பொதுவாக, வசனம் இன்னும் எளிமையாகவும் punch - உடனும் இருந்திருக்கலாம். PS1 லேயே கொஞ்சம் பாகுபலி, கொஞ்சம் டைட்டானிக் பார்த்துவிடலாம். கல்கிக்கு நியாயம், தமிழ் வரலாற்றுக்கு பெருமை, இந்திய சினிமாவுக்கு கவுரவம்,  இளைய தலைமுறைக்கு கர்வம் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். இத்தனையும் படித்த பிறகும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைக்கதை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம்