கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு எப்போது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக விக்ரம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். எனவே அப்போது படப்பிடிப்பை தொடங்க கார்த்திக் சுப்பராஜ் தயாராகி வருகிறாராம்.
விக்ரம் கதாநாயகனாகவும், துருவ் விக்ரம் வில்லனாகவும் நடிக்க இருக்கும் இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்கவிருப்பதாகவும், முக்கிய வேடங்களில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் நடிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் துருவ் விக்ரம்முக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று விக்ரம் மிகவும் ஆவலாக உள்ளாராம்.