Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திரா & தெலங்கானாவில் ‘விக்ரம்’ காட்டில் மழை…3 நாட்களில் இத்தனை கோடி வசூலா

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (10:35 IST)
விக்ரம் திரைப்படம் தெலுங்கில் விக்ரம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் விக்ரம் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஜூன் 3 ஆம் தேதியே தெலுங்கில் வெளியானது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் திங்கள் கிழமை வேலை நாளும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு படத்துக்குக் கூட்டம் இருப்பதாக அறிவித்துள்ளது. நான்காண்டுகளுக்குப் பிறகு கமல் படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக விக்ரம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments