Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் படத்தில் சூர்யா கதாபாத்திரம்… இணையத்தில் வைரலாகும் லோகேஷ் பகிர்ந்த போஸ்டர்!

விக்ரம் படத்தில் சூர்யா கதாபாத்திரம்… இணையத்தில் வைரலாகும் லோகேஷ் பகிர்ந்த போஸ்டர்!
, புதன், 1 ஜூன் 2022 (10:14 IST)
விக்ரம் திரைப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது.

இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் அவரின் கதாபாத்திரம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘சூர்யா இடம்பெற்றிருக்கும் விக்ரம் படத்தின் போஸ்டர்’ ஒன்றைப் பகிர இணையத்தில் வைரலாகி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹே சினாமிகாவுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஆகும் பிருந்தா… வெளியான தகவல்!