Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டண்ட் நடிகர்களுக்கு சம்பள பாக்கி… விக்ரம் படத்துக்கு வந்த சிக்கல்!

ஸ்டண்ட் நடிகர்களுக்கு சம்பள பாக்கி… விக்ரம் படத்துக்கு வந்த சிக்கல்!
, வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:42 IST)
விக்ரம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளம் இசைப்புயல் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பது தெரிந்ததே. 

இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்த நிலையில் ஸ்டண்ட் நடிகர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி இருப்பதால் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாம். கமல் நடிக்கும் ஒரு படம் நிதி பிரச்சனையால் பாதிக்கப்படுவது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி ரேஸில் இருந்தும் பின் வாங்குகிறதா எனிமி?