Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிப்பது இந்த பிரபல நடிகரா?

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிப்பது இந்த பிரபல நடிகரா?
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:53 IST)
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது ]
 
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே விக்ரமிடம் ராஜமவுலி தரப்பினர் ஒரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றும் இந்த பேச்சுவார்த்தையில் அனேகமாக விக்ரம் நடிப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
விக்ரம் மகேஷ்பாபு ராஜமவுலி மூவரும் இணையும் திரைப்படம் என்பதால் இந்த படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கதாநாயகனாக நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகமான சம்பளம் வில்லனாக நடிப்பதற்கு விக்ரம் வாங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபுதேவா, ரெஜினா படத்தின் முக்கிய அப்டேட்!