Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கௌதம் மேனன் – விக்ரம் திடீர் சந்திப்பு… மீண்டும் தொடங்குகிறதா துருவ நட்சத்திரம்!

கௌதம் மேனன் – விக்ரம் திடீர் சந்திப்பு… மீண்டும் தொடங்குகிறதா துருவ நட்சத்திரம்!
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (10:30 IST)
துருவ நட்சத்திரம் திரைப்படம் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது.

விக்ரம் நடிப்பில் இப்போது மகான், கோப்ரா, பொன்னியின் செலவன் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இவை இல்லாமல் துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இப்போது மகான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்ததாக கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

அந்த படத்தை முடித்தபின் தனது சிகையலங்காரத்தை மாற்றிவிட்டு, பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் என சொல்லப்படட்து. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் 15 நாட்கள் தேதிகள் ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் கௌதம் மேனன் – விக்ரம் ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் துருவ நட்சத்திரம் படம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில் பிரம்மாண்டமாக நடக்கும் விருமன் இசை வெளியீடு… கலந்துகொள்ளும் பிரபலங்கள்