Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

60 கோடி ரூபாய் கடன் இருக்கு… சொன்னபடி ரிலீஸ் ஆகுமா துருவ நட்சத்திரம்?

60 கோடி ரூபாய் கடன் இருக்கு… சொன்னபடி ரிலீஸ் ஆகுமா துருவ நட்சத்திரம்?
, வியாழன், 16 நவம்பர் 2023 (07:55 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்களுக்குள்தான் இருக்கிறது. ஆனால் படத்தின் மேல் கடன் தொகையாக 60 கோடி ரூபாய் வரை உள்ளதாம். அதை அடைத்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற சூழலில் படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் துபாய் பறந்த சிம்பு!