Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம்-துருவ் விக்ரம் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (20:19 IST)
விக்ரம்-துருவ் விக்ரம் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்!
சியான் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் ’கோப்ரா’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களின் அடுத்த கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் 60வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரமும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவருக்கும் சம அளவிலான கேரக்டர் என்றும் இருவருக்குமே மாஸ் கேரக்டர் என்றும், இந்த படம் துருவ் விக்ரமுக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது 
 
மேலும் இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்கும் நடிகர், நடிகைகளை அவர் தேர்வு செய்து வருவதாகவும் அனேகமாக விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், துருவ் ஜோடியாக ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments