தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தையும் நேரடியாக ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்ததாக அதன் தயாரிப்பாளர் சஷிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி பிளாட்பார்மில் நேரடியாக ரிலிஸ் செய்ய அதன் தயாரிப்பாளர் சஷிகாந்திடம் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமீபத்தில அவர் அளித்த நேர்காணலில் ‘ இந்தப் படத்தை 65 கோடி ரூபாயில் தயாரித்துள்ளோம். இப்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் 6 மாதங்களுக்கு மக்கள் திரையரங்குக்கு வர அஞ்சுவார்கள். நான் தற்போது தயாரித்து வரும் ஜகமே தந்திரம் உள்ளிட்ட 3 படங்களையும் நேரடியாக ஓடிடி பிளாட்பார்ம்களில் கேட்டுள்ளனர். ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.