மாதவன் – விஜய் சேதுபதி நடித்துள்ள ‘விக்ரம் வேதா’, அடுத்த மாதம் 7ஆம் தேதி ரிலீஸாகிறது.
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவனும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள படம் ‘விக்ரம் வேதா’. போலீஸ் அதிகாரியாக மாதவனும், மிகப்பெரிய ரவுடியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சார்பில், சசிகாந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சி.எஸ்.சாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர், நேற்று வெளியானது. ‘மதயானைக் கூட்டம்’ கதிர், வரலட்சுமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், அடுத்த மாதம் 7ஆம் தேதி ரிலீஸாகிறது.