Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் விஜய்சேதுபதி செய்த வேலை: வியந்துபோன மலையாள மக்கள்

கேரளாவில் விஜய்சேதுபதி செய்த வேலை: வியந்துபோன மலையாள மக்கள்
, புதன், 30 ஜனவரி 2019 (09:26 IST)
கேரளாவில் விஜய் சேதுபதி செய்த உதவியால் மக்கள் அவரை புகழ்ந்து வருகிறார்கள்.
விஜய்சேதுபதி ஒரு எளிமையான மனிதர். தாம் ஒரு நடிகர், செலிபிரிட்டி என்ற எண்ணமெல்லாம் அவருக்கு துளியளவும் இல்லை. அடிமட்டத்திலிருந்து வந்ததால் அடித்தட்டு மக்களிடமும் சகஜகமாக பேசக்கூடியவர், பழகக்கூடியவர். அதுவே அவரை மக்களுக்கு பிடிக்க முக்கிய காரணமாகும். எங்கு ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டாலும் அவர்களிடம் மூஞ்சை காமிக்காமல், அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுதான் அங்கிருந்து செல்வார்.
 
இந்நிலையில் அவரின் மாமனிதன் பட ஷூட்டிங் தற்பொழுது கேரளாவில் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கிருந்த ஊனமுற்றவரை பார்த்து கஷ்டப்பட்ட விஜய்சேதுபதி, உடனடியாக அவரிடம் சென்று அவருக்கு பண உதவி செய்துள்ளார். எல்லோரிடமும் பணமிருக்காது, அப்படி பணமிருக்கும் பலரிடம் அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற மனமிருக்காது. அப்படி உதவவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தான் விஜய்சேதுபதி எனும் மாநடிகர். இந்த வீடியோ வைரலாகி  மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஜெயம் ரவியின் இரண்டு நாயகிகள்