Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் 'லியோ' பட 3 வது சிங்கில் அப்டேட்....

leo vijay
, செவ்வாய், 10 அக்டோபர் 2023 (18:36 IST)
விஜய்யின் லியோ பட  3 வது சிங்கில்  அன்பெனும் என்ற பாடல் நாளை ரிலீஸாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து,  சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் திரிஷா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

சமீபத்தில், விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர்  வெளியாகி இணையதளங்கில் டிரெண்டிங்கிங் ஆனது.  

இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான், 2 வது சிங்கில் படாஸுதான் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில்  அன்பெனும் என்ற பாடல் நாளை ரிலீஸாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள்  இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!