'அழகிய தமிழ்மகன்', 'புலி', 'கத்தி' போன்ற திரைப்படங்களில் இளையதளபதி விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்த நிலையில் முதல்முறையாக தற்போது நடித்து கொண்டிருக்கும் 'விஜய் 61' படத்தில் மூன்று வேடங்களில் அவர் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது
விஜய்யின் மூன்று கேரக்டர்களுக்கு காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் ஜோடியாக நடித்து வருவதாகவும், மூன்று வேடங்களிலும் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்ட விஜய் முயற்சித்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.