Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிஸ்க் எடுத்து விஜயகாந்த் நடித்த காட்சி… இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படம்

ரிஸ்க் எடுத்து விஜயகாந்த் நடித்த காட்சி… இணையத்தில் வைரலாகும்  பழைய புகைப்படம்
, வெள்ளி, 1 ஜூலை 2022 (10:53 IST)
விஜயகாந்த் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘சேதுபதி IPS’

இந்த திரைப்படத்தில் விஜய்காந்த், மீனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க, பி வாசு இயக்க, AVM நிறுவனம் தயாரித்தது. அப்போது சூப்பர் ஹிட் திரைப்படமான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் விஜயகாந்தின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதிலும் அவரின் அறிமுகக் காட்சியில் பிரம்மாண்ட கடிகாரம் ஒன்றில் ஏறி வெடிகுண்டை செயலிழக்க செய்யும் ஸ்டண்ட் காட்சி பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில் இப்போது AVM நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான குகனின் மகளான அருணா இந்த ஸ்டண்ட் காட்சிக்காக விஜயகாந்த் எந்த பாதுகாப்பும் இல்லாமல் துணிச்சலாக அந்த கடிகாரத்தில் ஏறும் புகைப்படத்தைப் பகிர அது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் தற்போது உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் அவரின் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aruna Guhan (@arunaguhan)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“அந்த கதாபாத்திரம் கிடைத்தது அதிர்ஷ்டம்…” ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படம் பற்றி சாய்பல்லவி நெகிழ்ச்சி!