Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாக…” விஜயகாந்த் உடல்நலம் பெற நடிகர் சூர்யா ட்வீட்!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (07:56 IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து தொண்டர்கள் பதற்றமான நிலையில் விஜயகாந்த் உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து நடிகர்கள் சங்கம் சார்பாக நடிகர் நாசர் மருத்துவமனைக்கு சென்று வந்த பின்னர் விஜயகாந்த் நலமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜயகாந்தோடு பயணித்த பல கலைஞர்கள் அவர் உடல்நலம் பெற வேண்டி பிராத்தனை செய்வதாக ட்வீட் செய்தனர்.

இந்நிலையில் இப்போது நடிகர் சூர்யா தன்னுடைய எக்ஸ் தளத்தில் “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன். கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் இட்லி கடை பட ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தம்… காரணம் என்ன?

கம்பேக் கொடுக்க மார்க் ஆண்டனி 2 எடுக்க விரும்பும் விஷால்.. சம்மதிப்பாரா ஆதிக்?

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments