இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நேற்று நடைபெற்ற கடைசி டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 53 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்த போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் கலக்கிய அக்ஸர் படேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
போட்டிக்குப் பின்னர் பேசிய சூர்யகுமார் யாதவ் ”வீரர்களிடம் உங்களுக்கு சரியென்று தோன்றுவதை செய்யுங்கள் என சுதந்திரத்தோடு விளையாட வைத்தோம். அவர்களும் அதனை செய்தார்கள். அதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.